உலக தண்ணீர் தினம்

மண்ணூர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் உதவித் தலைமையாசிரியர் பால்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மண்ணூர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் உதவித் தலைமையாசிரியர் பால்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணூர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் உதவித் தலைமையாசிரியர் பால்குமார் தலைமையில் நடைபெற்றது. உலக நீர் தினத்தை முன்னிட்டு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜோசப்ராஜ் மாணவர்களுக்கு கூறியதாவது: பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால் இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
1933ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டு இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் தண்ணீரை மாசுப்படுத்தாமல் உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடவேண்டும். மேலும் மரங்களை வெட்டாமல் காடுகளை பாதுகாத்தால்தான் மழை பெய்யும் என உரையாற்றினார். முன்னதாக மாணவர்கள் உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் மற்றும் நீரின் குறியீடு வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர். முடிவில் ஆசிரியர் இராஜவேல் நன்றி கூறினார்.
சங்ககிரியில்...
சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட இருகாலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை எம்.ராதா தலைமை வகித்துப் பேசியது : குறைந்து வரும் மழை அளவு, பெருகி வரும் மக்கள் தொகை,  விஞ்ஞான வளர்ச்சி,  பல்வேறு காரணங்களால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள்இடம்பெயருகின்றனர். இந்த இடமாற்றம் நகரங்களின் சுற்றுச்சூழலையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும்   ஏற்படுத்துகின்றன. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  மழைப் பொழிவதற்கு அதிகளவில் மரங்களை நட வேண்டும். மழை நீர் சேமிப்பு, சேமித்த நீரை குறைவாக உபயோகித்தல், மறுஉபயோகம், மறுசுழற்சி என்ற கொள்கையைக் கடைப்பிடித்து உபயோகித்தால் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com