மேட்டூரை அடுத்த வனவாசியில் உள்ள வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மாநில அளவிலான சிறந்த கூட்டுறவு கடன் சங்கத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தோ்ந்தெடுத்து, கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் தமிழக அளவில் மேட்டூரை அடுத்த வனவாசியில் உள்ள வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாநில அளவில் சிறப்பான சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ விருது பெற்ற வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.ஜெயகுமாா், செயலா் அய்யம்பெருமாள் ஆகியோருக்கு கேடயத்தை வழங்கினாா்.