காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் கரூர் மாயனூரில் இருந்து வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் கரூர் மாயனூரில் இருந்து வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும்.  இதன் மூலம் வறட்சிப் பகுதிகள் முழுவது

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் கரூர் மாயனூரில் இருந்து வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும்.  இதன் மூலம் வறட்சிப் பகுதிகள் முழுவதும் பாசன வசதியாக மாறும்.  கரூர் முதல் குண்டாறு வரை கால்வாய் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்,  சங்ககிரி வட்டத்தில் நடைபெற  உள்ள முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
முகாமைத் தொடக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  பொதுமக்களிடத்தில் இருந்து பல்வேறு கேரிக்கைகள் அடங்கிய 4,700  மனுக்களை பெற்றுக் கொண்டும்,  ரூ.5 கோடியே 4 லட்சத்து 28 ஆயிரத்தில் 592 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில்  நலத் திட்ட உதவிகளையும் வழங்கிப் பேசியது:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நேரடியாகச் சென்று தொகுதி மக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று உரிய துறைகளுக்கு ஆய்வுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான காரணம் குறித்து அவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் முதியோர் ஓய்வூதியத் தொகை கோரி அதிகளவிலான மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.  தமிழகம் முழுவதும் உழைக்கும் திறனற்ற முதியோர் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்கப்பட உள்ளது.  அதில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 2ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
 நிலம், வீட்டுமனை, வீடுகள் வாங்கியிருப்போர்களுக்கு பட்டாக்கள், பட்டா மாறுதல் கோரி மனுக்கள் அளித்தால், அதனை ஆய்வு செய்து அவர்களுக்கு அதற்கான பட்டாக்கள், உத்தரவுகள் இம் முகாமில் வழங்கப்படும். அதிமுக அரசு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில்  அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
மேலும், குடிமராமத்துப் பணிகளுக்கு தற்போது ரூ.1,750 கோடி நிதி ஒதுக்கிடு செய்து சிறப்பாக செய்து செயல்பட்டு வருகிறது.  குடிமராமத்து திட்டத்துக்கு விவசாயிகள் அளித்து வரும் அமோக வரவேற்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அறிக்கை அளித்து வருகிறார்.
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் கரூர் மாயனூரில் இருந்து வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும்.  இதன் மூலம் வறட்சிப் பகுதிகள் முழுவதும் பாசன வசதியாக மாறும். கரூர் முதல் குண்டாறு வரை கால்வாய் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றுவோம்.  இத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக வைகை நதிக்கும், பின்னர்  குண்டாறுக்கும்  கால்வாய் வெட்டப்படும். டெல்டா பாசன விவசாயிகளுக்கு நவீன கால்வாய்கள் வசதி செய்து தர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் உலக வங்கி உதவியுடன் திட்டம் நிறைவேற்றப்படும்.
எத்தனை தடைகள் வந்தாலும் விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்றார். 
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமை வகித்தார்,  சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் எஸ்.செம்மலை,  சக்திவேல், வெங்கடாஜலம், வெற்றிவேல், ராஜா, சித்ரா, மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோலர் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.திவாகர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com