தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமை கருத்துப் போட்டி

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற புதுமை கருத்துப் போட்டியில் சுமார் 500 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற புதுமை கருத்துப் போட்டியில் சுமார் 500 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதுமைக் கருத்துப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புதுமை கருத்துப் போட்டிக்கு வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல், குடிநீர் மற்றும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் வாகனங்கள், கட்டட வடிவமைப்பு, சுற்றுப்புற சூழல் உள்ளிட்ட தலைப்புகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் வீ. கார்த்திகேயன் பேசியதாவது:
மாணவர்கள் தங்களது சிந்தனை வளத்தை மேம்படுத்தி நவீன தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள புதுமை கருத்துப் போட்டி உதவும் என்றார்.
இதில் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக கையடக்க மடிகணினி, இரண்டாம் பரிசாக டிஜிட்டல் கேமிரா, மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஆறுதல் பரிசாக எஃப்.எம். ரேடியோ பரிசாக வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com