காவலர், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் நோக்கிலும், வாக்குப் பதிவு நேரத்தில்

வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் நோக்கிலும், வாக்குப் பதிவு நேரத்தில் அசாம்பாவித நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, திங்கள்கிழமை மாலை எடப்பாடி நகரில் துணை ராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் கலந்துகொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் 227 துணை ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்புக் காவல் படையினர் பங்கு கொண்டனர். அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வெள்ளாண்டிவலசு காந்தி சிலை முன் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் எடப்பாடி காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் துணைக் காவல் ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீஸார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. ராஜீ தலைமையிலான போலீஸார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த அணிவகுப்பு சாரதா ரவுண்டானாவில் ஆரம்பித்து பேருந்து நிலையம்,  ராணிப்பேட்டை, கடை வீதி, புதுப்பேட்டை, காமராஜனார் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது.
இதில் ஆத்தூர் காவல் ஆய்வாளர் என். கேசவன், ஊரக காவல் ஆய்வாளர் கே. முருகேசன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தம்மம்பட்டியில்
தம்மம்பட்டியில் காவலர், ராணுவத்தினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி உடையார்பாளையம், கடை வீதி, நடு வீதி, குரும்பர்த்தெரு உள்ளிட்ட அனைத்து முக்கிய தெருக்களில் காவலர், ராணுவத்தினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
ஆத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், 116 ராணுவ வீரர்கள், 71 சிறப்புக் காவலர்கள் இதில் பங்கேற்றனர்.
கடந்த  ஏப்ரல் 6-ஆம் தேதி காவலர்கள் மட்டும் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com