கோனேரிப்பட்டியில் புனித வெள்ளி அனுசரிப்பு
By DIN | Published On : 21st April 2019 05:39 AM | Last Updated : 21st April 2019 05:39 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப்பட்டி தூய சலேத் அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவைப் பாதை, பங்கு ஆலய வளாகத்தில் தொடங்கி கல்லறைத் தோட்டம் வரை நடைபெற்றது.
இறைமகன் இயேசுவின் பாடுகளையும், சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகளையும் உயிரோவியமாக உலகமீட்பர் கலைக்குழுவினர் மற்றும் பாஸ்கர் குழுவினர் இணைந்து
அமைத்திருந்தனர்.
இறைமகன் இயேசு சிலுவையில் உயிர்விடுதல் மற்றும் அன்னை மரி தன் மடியில் இயேசுவின் உயிரற்ற உடலினை சுமந்த நிலையில் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர். தம்மம்பட்டி திருமண்கரடு தேவாலயத்திலும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது.