"பள்ளி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கிணறுகளை அமைக்க வேண்டும்'

மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைப்பதற்கு அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வலியுறுத்தினார்.

மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைப்பதற்கு அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வலியுறுத்தினார்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து அதை முறையாகப் பராமரிக்க வேண்டும். பருவமழை காலங்களில் விளையாட்டு மைதானம் மற்றும் வெளிவளாக பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சேமிப்பதற்காக மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைப்பதற்கு அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் முன்வர வேண்டும்.  
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள பேருந்து நிலையம், உழவர் சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்களுக்கு நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் வி. பாஸ்கரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். தமிழ்வாணி, உதவி தலைமை ஆசிரியர் டி. மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் எஸ். செந்தில்குமார், ஜெ. நித்யா, சுகாதார ஆய்வாளர் எஸ். சுரேஷ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com