சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி  எறியப்படும் நெகிழி பொருள்களை உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல்,  திறந்தவெளி மலம் கழிக்கப்படாத  ஊராட்சிகளாக  அறிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தல்,  கழிப்பறை இல்லாதோர் விவரப் பட்டியல் தெரிவித்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்,  ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகளை பயன்படுத்தப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். 
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதம்  செய்தல் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-19, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. 
எனவே சுதந்திர தினத்தன்று (ஆக.15) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com