சேலம் சரகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி 3,500 போலீஸார் பாதுகாப்பு 

சேலம் சரகத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி, 3 ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சேலம் சரகத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி, 3 ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 நாடு முழுவதும் 73-ஆவது சுதந்திர தினவிழா வரும் ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சேலம் சரகத்துக்குள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 3,500 போலீஸார் சுதந்திர தினவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 இந்நிலையில், சேலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, ஜங்சன், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைவர்களின் சிலைகள், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சுதந்திர தினவிழா நடைபெறும் மைதானங்கள் முழுமையாக போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 ரயில் நிலையத்தில்
 சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தமிழக ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். ரயில் நிலையத்தின் முன் கதவில் மெட்டல் டிடெக்டர் கருவி அமைத்து பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை பரிசோதித்து அனுப்பி வைக்கின்றனர். இதேபோல் நடைமேடைகளில் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டு ஆர்பிஎப் போலீஸார் சோதனையிடுகின்றனர்.
 மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் அரவிந்த்குமார் தலைமையிலான பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி ஏந்தியபடி ரயில் நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சுதந்திர தினத்தையொட்டி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த 3 நாள்களுக்கு பயணிகள், அவர்களது உடமைகள், பார்சல்கள் என அனைத்தையும் சோதனையிட உள்ளோம். இதில் மோப்ப நாய்களைக் கொண்டும் சோதனை நடத்தப்பட உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com