பெரியார் பல்கலை.யில் குறுந்தொலைவு ஓட்டம்: 12 பேர் அகில இந்தியப் போட்டிக்குத் தேர்வு

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறுந்தொலைவு ஓட்டத்தில் தேர்வு பெற்ற 12 பேர், அகில இந்தியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குறுந்தொலைவு ஓட்டத்தில் தேர்வு பெற்ற 12 பேர், அகில இந்தியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
 பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான குறுந்தொலைவு ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தொடக்கி வைத்தார். இதனையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கி, கருப்பூர், குள்ளகவுண்டன்பட்டி, சங்கீதப்பட்டி வரை சென்று மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பும் வகையில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு குறுந்தொலைவு ஓட்டம் நடைபெற்றது.
 இதில் ஆண்கள் பிரிவில் ஏவிஎஸ் கல்லூரி மாணவர் எஸ்.சசிகுமார், 33 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்த முதலாவதாக வந்தார். இதையடுத்து, ஏவிஎஸ் கல்லூரி மாணவர்கள் எம்.பாலசந்தர், ஜி.ஜீவா, பி.மாணிக்கம், செல்வம் கல்லூரி மாணவர் வி.சந்தீப், முத்தாயம்மாள் கல்லூரி மாணவர் அரவிந்த் ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் வந்தனர். இதேபோன்று பெண்கள் பிரிவில் நாமக்கல் செல்வம் கல்லூரி மாணவி ஆர்.கிருத்திகா 41 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலாவதாக வந்தார்.இவரைத் தொடர்ந்து பத்மவாணி கல்லூரி மாணவிகள் டி.லாவண்யா, டி.லதா, முத்தாயம்மாள் கல்லூரி மாணவி ஜெ.கௌதமி, ஏவிஎஸ் கல்லூரி மாணவி ஏ.சுபலட்சுமி, எடப்பாடி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பி.பானுமதி ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் வந்தனர்.
 முதல் 6 நிலைகளில் வெற்றி பெற்றவர்களில் ஆடவர் பிரிவினர் மங்களூர் பல்கலைக்கழகத்திலும், மகளிர் பிரிவினர் ஆந்திர பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ள அகில இந்திய குறுந்தொலைவு ஓட்டப் போட்டியில், பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்கின்றனர்.
 வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வை.நடராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.வெங்கடாசலம், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சுரேஷ்குமார், டி.ஆர்.இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com