சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 73வது சுதந்திர தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 73வது சுதந்திர தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் தலைமை வகித்து தேசியகொடியை ஏற்றி வைத்துப் பேசினார். சமூகநலத் துறை தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், , தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 தேவண்ணகவுண்டனூர் நடுநிலைப்பள்ளியில்...
 சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பூமலை தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியர் க.திருஞானம் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியர்கள் ஆர்.முருகன், சித்ரா, சீனிவாசன், ரமா மகேஸ்வரி, உமா மகேஸ்வரி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 அக்கமாபேட்டையில்...
 சங்ககிரி அருகே உள்ளஅக்கமாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் நெடுமாறன், செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கே. நடராஜன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர்கள் நிகலா, இந்திராகாந்தி, ஓய்வு பெற்ற ஆசிரியர் முனியப்பன், சமூக ஆர்வலர் சீனிவாசன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். விழா முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com