ஆக. 23-இல் சேலத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா

இஸ்கான் சார்பில் சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இஸ்கான் சார்பில் சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 23- ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. விழாவில் பஜனை, உபன்யாசங்கள், இஸ்கான் திரைப்படம், சென்னை பிரபுபாதர் தியேட்டர்ஸ் குழுவினரால் கிருஷ்ண லீலா என்ற பிரமாண்ட நாடகமும் நடைபெற உள்ளது. மேலும் ஸ்ரீ கிருஷ்ண பலராமனரின் விக்ரகங்களுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி மற்றும் கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
 இரவு 10.30 மணிக்கு அபிஷேகம், ஆரத்தி கிருஷ்ண, பலராமருக்கு நடைபெற உள்ளது. நாள் முழுவதும் அனைவருக்கும் பிரசாத விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 விழாவில் ஆன்மிக புத்தக நிலையங்கள், பிரசாத அரங்குகள், கோயில் கட்டுமான பணி அரங்கம், கேள்வி-பதிலுக்கான பந்தல் ஆகியவை இடம் பெறுகின்றன.
 மேலும் கோயில் திருப்பணி நடைபெற்று வருவதால் ஆக. 23-இல் கருப்பூர் ஹரே கிருஷ்ண கோயிலில் தரிசனமோ, நிகழ்ச்சிகளோ இருக்காது என இஸ்கான் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com