தம்மம்பட்டியிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

தம்மம்பட்டியிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், சிறப்பு குறைதீர் கூட்டத்தில், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தம்மம்பட்டியிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், சிறப்பு குறைதீர் கூட்டத்தில், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம், தம்மம்பட்டி பொதுமக்கள் சார்பில், த.மா.கா. நகரத் தலைவர் ராஜேஸ்கண்ணா அளித்த கோரிக்கை மனு விவரம்:
 அரசுப் போக்குவரத்துக் கழக தம்மம்பட்டி கிளையிலிருந்து, சென்னைக்கு இரவு 8 மணிக்கு இயக்கப்படும் பேருந்து, அதிகாலை 3 மணிக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றடைகிறது. இதனால், அரசு அலுவல்கள் மற்றும், கல்வி சம்மந்தப்பட்ட தொடர்பாக செல்பவர்கள், சுமார் 2 மணி நேரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
 இதைத் தவிர்க்க, தம்மம்பட்டியில் இரவு 8 மணிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தை, இரவு 10 மணி என நேரம்மாற்றி இயக்கினால், சென்னை கோயம்பேடுக்கு, காலை 5 மணிக்குச் சென்றடையும். அதனால், கோயம்பேட்டில் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
 மேலும், விடுமுறை மற்றும் முக்கிய விசேஷ தினங்களில், இரவில் இரண்டு அல்லது மூன்று சிறப்புப் பேருந்துகள், தம்மம்பட்டி டெப்போவிலிருந்து, சென்னைக்கு இயக்கப்பட்டன. அந்தச் சிறப்புப் பேருந்துகள், தற்போது இயக்கப்படுவதில்லை.
 அதனால், விடுமுறை தினங்களில், தம்மம்பட்டி வழியாக, சென்னைக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் 450, 500 ரூபாய் எனக் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 எனவே, தம்மம்பட்டியில் பணிமனையிலிருந்து இரவு புறப்படும் அரசு பஸ்சின் நேரத்தை மாற்றி இயக்கவும், விடுமுறை தினங்களில், தம்மம்பட்டியில் இருந்து, சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com