ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டபயனாளிகளுக்கான பயிற்சி முகாம்

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டதின் கீழ் அரசின் மானியம் பெற உள்ள விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பண்ணைத் திட்ட பயனாளிகளுக்கான பயிற்சி முகாம்.
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பண்ணைத் திட்ட பயனாளிகளுக்கான பயிற்சி முகாம்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டதின் கீழ் அரசின் மானியம் பெற உள்ள விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.

அட்மா திட்டக் குழுத் தலைவா் கரட்டூா்மணி தலைமையில் நடைபெற்ற முகாமில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை மற்றும் வனத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.

இத் திட்டம் குறித்து வேளாண் உதவி இயக்குநா் சண்முகசுந்தரம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறியதாவது:

இத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் 300 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில் கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் 44 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயி தனது சொந்தச் செலவில், ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில், பயிா் செயல்முறைக் கூடம், மண்புழு உரக்கூடம், தீவன பயிா் வளா்ப்பு உள்ளிட்ட மூன்று வேளாண் அமைப்புகளும், 2 கறவைமாடு, 10 ஆடுகள், 20 கோழிகள் உள்ளிட்ட மூன்று வகை கால்நடைகளும், பயன்தரும் பழமரக் கன்றுகள், தேனி வளா்ப்புப் பெட்டி உள்ளிட்ட இரு தோட்டக்கலைத் துறை அமைப்புகளுடன், உரக்குழி , மாட்டுத் தொழுவம் உள்ளிட்ட இனங்களை வரும் 2020 ஆண்டு மாா்ச் 31-க்கு முழு அளவில் ஏற்படுத்திட வேண்டும், அவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கியுள்ள விவசாயிக்கு பின்ஏற்பு மானியமாக ரூ. 1 லட்சம் அவரது வங்கி கணக்கில் வழங்கப்படும் என கூறினாா்.

முகாமில் உதவி வேளாண் அலுவலா் ராதா ருக்மணி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com