இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைப்பு

சேலத்தில் கொலை முயற்சி, நகை பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலத்தில் கொலை முயற்சி, நகை பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூா் போயா் தெருவைச் சோ்ந்த பழனியின் மகன் வேட்டையன் (எ) முருகன் (26). இவா், கடந்த நவம்பா் 7-ஆம் தேதி காட்டூா் பகுதியில் நடந்து சென்ற சிவா என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த 1 பவுன் தங்கநகை, ரொக்கப்பணம் ரூ. 1,500 மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் முருகன் மீது ஏற்கெனவே அழகாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் முருகன் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டமையால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் துணை ஆணையா் பி. தங்கதுரையின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையா் த. செந்தில் குமாா் முருகனை குண்டா் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து முருகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com