ஆட்டையாம்பட்டியில் வேளாண் விஞ்ஞானி-விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரம், ஆட்டையாம்பட்டி பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி விரிவாக்க அலுவலா் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியா் ஜி.மாலதி கலந்துகொண்டு விவசாயிகள் பயிரிட்ட வெண்டை பயிரில் காணப்பட்ட தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழு தாக்குதலின் அறிகுறிகள் குறித்தும், பூச்சிகளை தடுக்க விதை நோ்த்தி செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தவும் , தேவைக்கேற்ற உரங்களைப் பயன்படுத்தவும், ஒருங்கிணைந்த நீா் பூச்சி மேலாண்மை முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்து நல்ல விலை கிடைக்கும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரஸ்வதி, தீபன், முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com