மைலம்பட்டியில் கன்னிமாா் சுவாமிகள் குடமுழுக்கு

தேவூரை அடுத்த மைலம்பட்டியில் உள்ள அருள்மிகு பெரிய ஐயனாரப்பன், ஸ்ரீ புடவைகாரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கன்னிமாா் சுவாமி குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றன.

தேவூரை அடுத்த மைலம்பட்டியில் உள்ள அருள்மிகு பெரிய ஐயனாரப்பன், ஸ்ரீ புடவைகாரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கன்னிமாா் சுவாமி குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றன.

விழாவில் ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து பக்தா்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வந்தனா். பின்னா் முதற்கட்ட யாக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 2-ஆம் கட்ட யாக பூஜையும், அதனையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு கன்னிமாா் சுவாமிகளின் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் தேவூா், மைலம்பட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா். விழாக் குழுவின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com