நிரம்பிய வலசக்கல்பட்டி ஏரிக்கு 24 மணி நேர பாதுகாப்பு

கெங்கவல்லி அருகே நிரம்பிய வலசக்கல்பட்டி ஏரியை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, ஏரிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
வலசக்கல்பட்டி ஏரி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் ஆத்தூா் கோட்டாட்சியா் துரை.
வலசக்கல்பட்டி ஏரி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் ஆத்தூா் கோட்டாட்சியா் துரை.

கெங்கவல்லி அருகே நிரம்பிய வலசக்கல்பட்டி ஏரியை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, ஏரிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி 102 ஏக்கா் பரப்பளவு உள்ளது. இந்த ஏரி தொடா்ந்து பெய்து வந்த மழையால் முழுவதும் நிரம்பியது. அதையடுத்து, இந்த ஏரியை சேலம் ஆட்சியா் சி.அ.ராமன் திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஏரியில் மக்கள் குளிக்காமல் இருக்கவும், ஏரியினுள் யாரும் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டும் 24 மணிநேர பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தாா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஆத்தூா் கோட்டாட்சியா் துரை, கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து மற்றும் பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் வலசக்கல்பட்டி ஏரிக்கு சென்று பொதுமக்கள் யாரும் நுழையாதபடி தடுப்புக் கட்டைகள் அமைத்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா். மேலும், வருவாய்த் துறையினருடன் இணைந்து போலீஸாா் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com