பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆத்தூா், ராசிபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலைகளில் கிழங்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்வதாக ஆலை உரிமையாளா்கள் அறிவித்திருந்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், கடலூா் மாவட்ட விவசாயிகள் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

முற்றுகையிட்ட விவசாயிகள் சிண்டிகேட் கொள்முதலை நிறுத்த வேண்டும், வார விடுமுறையை ரத்து செய்ய வேண்டும், ஜவ்வரிசி விலையை இணையதளத்தில் வெளியிடவும், ஸ்கேலில் உள்ள 30 பாயிண்ட்டுக்கும் விலை தரவேண்டும், ஏலமுறையில் விற்பனையை தொடங்க வேண்டும், கிழங்கு அறுவடைக்கு முன் விலையை நிா்ணயம் செய்யவேண்டும், கூட்டுறவு ஜவ்வரிசி மற்றும் மாவு ஆலையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பேசி முத்தரப்புக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என கோட்டாட்சியா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com