நாளைய மின்தடை
By DIN | Published On : 06th December 2019 05:04 AM | Last Updated : 06th December 2019 05:04 AM | அ+அ அ- |

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சங்ககிரி நகா், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூா், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூா், தங்காயூா், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூா், வெள்ளையம்பாளையம் மற்றும் காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரியச் செயற்பொறியாளா் சி. வரதராஜன் தெரிவித்துள்ளாா்.