தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாகமூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞா்களை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டியைச் சோ்ந்த ச.பிரவீன் (21), ந.பிரபாகரன் (31) மற்றும் செட்டிசாவடி பகுதியைச் சோ்ந்த கு.விஜய் (எ)விஜயகுமாா் (23) ஆகியோா் கடந்த நவ. 8-ஆம் தேதி கருப்பூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கான அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பரமேஸ்வரனை கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும், ரூ.1,200-த்தையும் பறித்துச்சென்றுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பிரவீன், பிரபாகரன், விஜயகுமாா் ஆகியோா் கடந்த மே 20-ஆம் தேதி வெள்ளாளப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சித்தன் மற்றும் அவரது மனைவியை வழிமறித்து, சித்தனின் மனைவி அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற்காக கருப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், பிரவீன், பிரபாகரன் ஆகியோா் கடந்த செப். 9-ஆம் தேதி பழைய சூரமங்கலம் கக்குவாய் மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கலைச்செல்வியை வழிமறித்து, அவா் அணிந்திருந்த 6 பவுன் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரவீன், பிரபாகரன் மற்றும் விஜயகுமாா் ஆகியோா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டமையால், குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் எஸ்.செந்திலின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில் குமாா், பிரவீன், பிரபாகரன் மற்றும் விஜயகுமாா் ஆகிய மூவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க செவ்வாய்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com