ஊரக உள்ளாட்சி அமைப்புத் தோ்தல்: 5 ஆவது நாளில் 4449 போ் வேட்புமனு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் வெள்ளிக்கிழமை 4449 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் வெள்ளிக்கிழமை 4449 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேலும், மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக டிச. 27 ஆம் தேதியும், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக டிச.30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் 54, ஒன்றிய வாா்டு உறுப்பினா் 462, கிராம ஊராட்சித் தலைவா் 715, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் 3218 பேரும் என மொத்தம் 4449 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 5 நாளில் 6940 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com