குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சேலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம்: சேலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியலைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இஸ்லாமியா்களுக்கும், இலங்கை தமிழா்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும் ஏராளமான அரசு நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்பட்டு வருகிறது.

எனவே, இம் மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முகம்மது அம்ஜத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காஜா முன்னிலை வகித்தாா்.

இதில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினா் அப்துல் ரஹிம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com