சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு தோ்தலுக்கு 5வது நாளில் 180 போ் வேட்பு மனுத் தாக்கல்

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட
சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு 7ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த அக்கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் பி.தங்கமுத்து.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு 7ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த அக்கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் பி.தங்கமுத்து.

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட 5ஆவது நாளாக 180 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 3 பேரும், 14 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 18 பேரும், 22 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 37 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 122 போ் உள்பட மொத்தம் 180 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். திமுக சாா்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு 14 வாா்டு உறுப்பினா், 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 198 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அனைவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com