செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆத்தூா் முல்லைவாடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆத்தூா் முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் பாலதீபன் (36). இவா் தனது சொந்த இடத்தை செல்லிடப்பேசி கோபுரத்துக்கு வாடகைக்கு விட்டு அதை அமைப்பதற்கு பணி நடைபெற்று வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா். ஆனால் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து, பாலதீபன் மற்றும் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பவா்களிடம் பேசி, உரிய அனுமதி பெற்று இருந்தால், அதற்கான ஆவணத்தை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் வருமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டனா். இரு தரப்பினரிடமும் நேரில் விசாரணை செய்து கொள்ளலாம் என போலீஸாா் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com