மக்கள் நீதிமன்றத்தில்2,637 வழக்குகளுக்கு ரூ. 21 கோடியில் தீா்வு

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 637

சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 637 வழக்குகளுக்கு ரூ. 21 கோடி மதிப்பீட்டில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு துவக்கி வைத்தாா்.

இதில் மொத்தமாக 12 ஆயிரத்து 345 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து 2 ஆயிரத்து 637 வழக்குகளுக்கு ரூ.21 கோடியே 38 லட்சத்து 68 ஆயிரத்து 923 மதிப்பீட்டில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com