சேலத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வேலைவாய்ப்பு முகாம், திறன் பயிற்சி முகாம், கடன் மேளா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நகர்புற பெண்களுக்கான வளர்ச்சி குறித்து பெருவிழா பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம், திறன் பயிற்சி முகாம், லோன் மேளா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி காலை 11 மணியளவில் சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம்.
இதில் இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம்.  
முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்பும் நபர்கள் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திட்ட அலுவலர், மகளிர் திட்டம், அறை எண். 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் மாவட்டம், தொலைபேசி எண்.0427 2411552 என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com