கெங்கவல்லியில் கல்விச் சீர் வழங்கும் விழா
By DIN | Published On : 14th February 2019 09:29 AM | Last Updated : 14th February 2019 09:29 AM | அ+அ அ- |

கெங்கவல்லி பேருராட்சியின் 10-ஆவது வார்டு அரசு நடுநிலைப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊர் பொதுமக்கள் பள்ளிக்காக தண்ணீர் டிரம், பாய்கள், விளையாட்டுப் பொருள்கள், கல்வி உபகரணங்கள், பிளாஸ்டிக் குடங்கள், நாற்காலிகள் என ரூ.9 ஆயிரத்திலான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணி முத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். இதில், பிடிஏ தலைவர் சடையன், ஆசிரியப் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், டி.சுப்பிரமணியன், பி.சுப்பிரமணியன், ஊர் முக்கியப் பிரமுகர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். வேல்முருகன் நன்றி கூறினார்.