சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா

வாழப்பாடி அருகே ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை வாயிலாக அமைக்கப்பட்டு

வாழப்பாடி அருகே ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை வாயிலாக அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா கோயிலில், கிராமிய விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை, ஜே.சி.ஐ.,மெட்ரோ சங்கம், கமலாலயம் குழந்தைகள் காப்பகம், சேலம் வரலாற்று ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, வாழப்பாடி ஷீரடி சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார். கமலாலயம் காப்பக நிர்வாகி ஆதிராஜன் வரவேற்றார். 
வாழப்பாடி ஜே.சி.ஐ., மெட்ரோ சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ரமேஷ், விஜிபிரியா, நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் கவிஞர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரம்பரிய முறைப்படி பிரம்மாண்டமான புதுப்பானையில் பொங்கலிட்டு,  விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகள், சிறுவர்-சிறுமியரின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவில், பேளூர் பாண்டித்துரை, விக்னேஷ்குமார், கௌரி திருவேங்கடம், பா.ம.க.,ராமநாதன், இரா. முருகன், ஐயங்கார் சுரேஷ், அர்ஜூனா வசந்த், ராஜேஷ்கண்ணா, தனசேகரன், பன்னீர்செல்வம், வெங்கடாஜலம், மேதா ரமேஷ், ரவிராஜா, ஜீவநாராயணன், ராகேஷ்நடராஜன் ஆகியோர், போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர்-சிறுமியருக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சாய் அறக்கட்டளை தன்னார்வலர்கள் செல்வா, அரசவர்மன், இளையரசன், சூர்யா, விக்னேஷ், ராகுல், குணசீலன், சதீஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். அறக்கட்டளை நிர்வாகி மாதேஸ்வரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com