தமிழர் திருநாளை கொண்டாடிய தற்காப்பு கலைஞர்கள்

சங்ககிரி அருகே உள்ள சங்ககிரி ஆர்.எஸ். வண்டிப்பட்டறை பகுதியைச் சேர்ந்த அகத்தியர் தற்காப்பு கலைக்கூட

சங்ககிரி அருகே உள்ள சங்ககிரி ஆர்.எஸ். வண்டிப்பட்டறை பகுதியைச் சேர்ந்த அகத்தியர் தற்காப்பு கலைக்கூட கலைஞர்கள், தமிழர் திருநாளை  பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி கொண்டாடினர். 
அகத்தியர் தற்காப்பு கலைக்கூட கலைஞர்கள் தைப் பொங்கல் தமிழர் திருநாளை பாரம்பரியமாக கொண்டாடும் விதமாக, அவர்கள் பயன்படுத்தும் தற்காப்புக் கருவிகளுடன் அகத்திய முனிவரின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கலைஞர்கள் குரு வணக்கம் செலுத்தி தலைமைப் பயிற்சியாளர் எஸ்.சுரேஷ் தலைமையில் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள்  பராம்பரியமிக்க தற்காப்புக் கலைகளான சிலம்பம் விளையாடுதல், கத்தியுடன் வருபவர்களை எவ்வாறு தடுப்பது, சிலம்பத்தில் பல்வேறு வகையான தீப் பந்தங்களை சுற்றி அதில் எவ்வாறு தற்காத்து விளையாடுவது என்பது குறித்து குழுமியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
அதனையடுத்து, கலைஞர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் வரை அனைத்து தற்காப்புகளையும் விளையாடியவாறே சென்றனர்.  இவைகள் பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு, பொங்கல் பண்டிகைக்காக சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடுக்கு சென்றவர்கள்ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சிகளை பார்வையிட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com