சேலம்  உருக்காலை தனியார்மயத்தைக் கண்டித்து குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து குடும்பத்தினருடன் அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில்  தொழிலாளர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  


  சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து குடும்பத்தினருடன் அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில்  தொழிலாளர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  
 சேலம்  உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  அந்தவகையில்,  சேலம் உருக்காலையை விற்க தற்போது சர்வதேச அளவில் டெண்டர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. 
ஏற்கெனவே சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக சேலம் உருக்காலைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதில் சேலம் உருக்காலை,  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலாய் இரும்பாலை,  கர்நாடக மாநிலம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய மூன்று ஆலைகளையும் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் இந்த முடிவுக்கு நாடு முழுவதும்  தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   
சேலம் உருக்காலை அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் குடும்பத்தினருடன் மோகன்நகர் இரண்டாம் கேட் முதல் மூன்றாம் கேட்  வரை பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இதில் உருக்காலைத் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சேலம் உருக்காலைப் பாதுகாப்பு  ஒருங்கிணைப்புக் குழு  சார்பில் நடைபெற்ற  அனைத்து சங்கத்  தொழிலாளர்  குடும்பத்தினருடன்  நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில்  சேலம் தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன்,  சேலம் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.  ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com