பி.இ. மாணவர் சேர்க்கை: சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 6-ல் தொடக்கம்: அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தகவல்

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் ஜூன் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தெரிவித்துள்ளார். 

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் ஜூன் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான வசதி மையம் சேலம் அரசு பொறியியல் கல்லூரி டிஜிட்டல் நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. பி.இ. படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பணி மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கையின் 2-ஆம் கட்ட நிகழ்வான அசல் சான்றிதழ்
சரிபார்ப்புப் பணிகள் வரும் ஜூன் 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சேலம் அரசு பொறியியல் கல்லூரி டிஜிட்டல் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தில் நடைபெற உள்ளன. இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்த மாணவர்களில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி வசதி மையத்தினை சான்றிதழ் சரிபார்ப்பு சேவைக்கென தேர்வு செய்தவர்கள், தங்களது 12-ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் ரேண்டம் எண்கள் அடிப்படையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் நேரில் வருகை தந்து அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்த்திட தெரிவிக்கப்படுகிறது. 
பொதுப்பிரிவு,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு அனைத்துக்கும் இந்த மையத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் போது தங்களுடைய 10-ம் வகுப்பு,11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்,பள்ளி மாற்றுச் சான்றிதழ்,சாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை தவறாமல் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகம் வந்து செல்ல சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்,ஓமலூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து போதிய அரசுப் பேருந்துகள் இயங்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. 
கல்லூரி வளாகத்தில் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்திடவும், இதற்கான பணிகளை விரைந்து முடித்திடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை உடனுக்குடன் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com