தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வீரபாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பாரப்பட்டி, ஆ

ஆட்டையாம்பட்டி / வாழப்பாடி, ஜூன் 13: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வீரபாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட பாப்பாரப்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்டையாம்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 600 மாணவர்களுக்கு, புகையிலையை பல்வேறு வகையில் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களுக்கிடையே புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் பொது இடங்களில் புகைப்பிடித்தல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள புகையிலை விற்பனை செய்தவர்களுக்கு ரூ. 2,100 அபராதமும், ரூ. 4,800 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களும் அளிக்கப்
பட்டன.
இந்தச் சோதனையில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மாவட்ட நல கல்வியாளர் பிலவேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, மற்றும் ஆய்வாளர்கள் ஆறுமுகம் ,மாதேஸ்வரன், ராஜ்குமார், மைக்கேல் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
வாழப்பாடியில்...
பெத்தநாயக்கன்பாளையத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து பொது இடங்களில் புகைப் பிடித்தவர்கள், புகையிலைப் பொருள்கள் விற்றவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
உலக புகைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி, சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உத்தரவின்பேரில், பெத்தநாயக்கன்பாளைய வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள் செல்வம், கலியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, சங்கர், ஆனந்த், ராமச்சந்திரன், வினோத் ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்த செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின்போது பொது இடங்களில் புகைப் பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில், புகையிலை பொருட்களான பீடி, சிகரெட் போன்ற பொருள்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை விதிகளை பின்பற்றாத கடைகாரர்களுக்கு, புகையிலை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை சட்டத்தின் கீழ், மொத்தம் ரூ. 2,300  அபராதம்
வசூலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com