சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான்

சேலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை துவக்கி வைத்தார். இந்த மாரத்தானில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
குழந்தைகளின் நடவடிக்கைகள் அனைத்தும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களைத் தடுக்க பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை. இளைஞர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல சினிமா துறை மட்டுமின்றி நாளிதழ்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வேண்டுகோள்  விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com