ஜவகர் சிறுவர் மன்றத்தில் கலைப் பயிற்சி:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் பள்ளி சிறுவர்களுக்கான பகுதி நேர கலைப் பயிற்சி அளிக்கும் ஜவகர் சிறுவர் மன்றத்தில் சேர புதன்கிழமை முதல்

சேலத்தில் பள்ளி சிறுவர்களுக்கான பகுதி நேர கலைப் பயிற்சி அளிக்கும் ஜவகர் சிறுவர் மன்றத்தில் சேர புதன்கிழமை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை பண்பாட்டுத்துறை கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் கலைகளைப் பயிலும் வகையில் கட்டணமில்லா பகுதி நேர கலைப்பயிற்சியை அளித்து வருகிறது.
சேலம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் தளவாய்ப்பட்டியில் ஆவின் பால்பண்ணை எதிரில் திருப்பதி கவுண்டனூர் சாலையில் உள்ள கலை பண்பாட்டு மைய வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தில் குரலிசை (வாய்பாட்டு), பரதநாட்டியம், ஓவியம், ஜிம்னாஸ்டிக்  ஆகிய கலைகளில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்கள் இப் பயிற்சியில் சேரலாம். மேலும் இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ. 300 மட்டும் செலுத்தப்பட வேண்டும். இந்த மன்றத்தில் உறுப்பினராகிப் பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட, மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும்.
மேலும் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்கவுள்ளன. மேலும் விவரங்களுக்கு சேலம் ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9487136256  என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை சேலம் மாவட்ட சிறார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com