ஜூன் 28-இல் 385 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூன் 28-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜூன் 28-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராமகளில் 1.5.2019 தொழிலாளர் தினத்தில் நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் மக்களவைத் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தால், ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான மாற்று தேதியாக ஜூன் 28 அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.    
இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத  ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப் பட்டியல் தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுவது குறித்து
விவாதிக்கப்படும். 
திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதம் செய்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 
அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-2020, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல் மற்றும் அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com