சிவலிங்கம் வடிவமைப்புப் போட்டி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வனிதா கிளப் சார்பில் மகா சிவராத்திரி மற்றும் சர்வதேச மகளிர்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வனிதா கிளப் சார்பில் மகா சிவராத்திரி மற்றும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவலிங்கம் வடிவமைப்புப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் ஆர்வத்தோடு பங்கேற்று 12 சிவலிங்கங்களை தத்ரூபமாக வடிவமைத்து மழைவேண்டி வழிபாடு நடத்தினர். விழாவுக்கு வனிதா கிளப் தலைவி சூர்யகுமாரி தலைமை வகித்தார். 
செயலாளர் உமா சீனிவாசன் வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியை ஹரி முன்னிலை வகித்தார். பெண்களுக்கான சிவலிங்கம் வடிவமைப்புப் போட்டியை வாசவி கிளப் ராஜசேகர் தொடக்கி வைத்தார்.
போட்டியில் பங்கேற்ற பெண்கள் 12 ஜோதி லிங்கங்களையும் தத்ரூபமாக வடிவமைத்து வைத்திருந்தனர். 
இதில், காய்கறிகள் மற்றும் மங்கள பொருள்களான மஞ்சள், குங்குமத்தைக் கொண்டு சிவனை அலங்கரித்து வைத்திருந்த ரம்யா சிவக்குமார் முதல் பரிசு பெற்றார். 
சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண்ணால் செய்யப்பட்ட வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை வடிவமைத்த லாவண்யா மகேந்திரன் இரண்டாம் பரிசும், சர்க்கரையில் சிவலிங்கம் வடித்த பிரியா மூன்றாம் பரிசும், திருவண்ணாமலை அடிமுடி சிவலிங்கத்தை வடிவமைத்த லட்சுமி சிவக்குமார் நான்காம் பரிசும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, பெண்கள் வடிவமைத்த 12 ஜோதிர்லிங்களுக்கும், வறட்சி நீங்கி மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com