வசிஷ்டநதியின் குறுக்கே ரூ.5.5 கோடியில் மேம்பாலம் அமைக்க பூமிபூஜை

அம்மம்பாளையம் வசிஷ்ட நதி குறுக்கே தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட மேம்பாலம் ரூ. 5.5 கோடியில்

அம்மம்பாளையம் வசிஷ்ட நதி குறுக்கே தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட மேம்பாலம் ரூ. 5.5 கோடியில் அமைப்பதற்கான  பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஊராட்சியில் வசிஷ்ட நதியின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்தப் பாலத்தை கடந்துதான் ஊராட்சி மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.  ஆற்றில் வெள்ளம் வரும் காலத்தில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால், இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைத்துக் கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் ஆணைப்படி நெடுஞ்சாலைத் துறையின் பொது நிதியில் இருந்து ரூ. 5.5 கோடி மதிப்பிலான மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டதை அடுத்து சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. காமராஜ், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர். எம். சின்னதம்பி, ஆத்தூர் நகரச் செயலாளர் அ. மோகன், ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் சி. ரஞ்சித்குமார், உமையாள்புரம் கூட்டுறவு வங்கித் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com