சேலம் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குப்பதிவு மையங்கள்: ஆட்சியர்

மக்களவைத்  தேர்தலுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.


மக்களவைத்  தேர்தலுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் மக்களவைத் தேர்தலில் சேலத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் வழங்கினார். முன்னதாக 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்துகளின் முகப்பு மற்றும் உள்புறத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பேருந்து பயணிகள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சேலம் மாவட்டத்தில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தலைமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் எந்த சிரமமுமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com