"வழக்கமான கற்றல் முறைகளை பின்பற்றினால் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாது'

வழக்கமான கற்றல் முறைகளைப் பின்பற்றினால் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு மத்திய

வழக்கமான கற்றல் முறைகளைப் பின்பற்றினால் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. சஞ்சய் தெரிவித்தார்.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நெட், செட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வுகளில் இதழியல் மாணவர்கள் பங்கேற்பதற்கான மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பில் திங்கள்கிழமை தொடங்கின. அந் நிகழ்ச்சியில் தலைமை வகித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் பேசியது: "இதழியல் துறை ஆய்வாளர்களும், மாணவர்களும் தேசிய அளவிலான தகுதித்தேர்வுகளில் வெற்றி அடைவதற்காக பல்கலைக்கழகத்தில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்துறையின் தேவையைக் கருதி இரண்டாண்டு முதுகலைப் பட்டம் மட்டுமின்றி ஐந்தாண்டுப் பட்டப்படிப்பும், விர்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்சார் படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, ஊடகத் துறையை அனைவரும் இணைந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.
பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. சஞ்சய் ஊடகக் கல்வியின் இன்றையத் தேவை குறித்துப் பேசியது:
"இன்றைக்கு வழக்கமான கற்றல் முறைகளை மட்டும் பின்பற்றினால் தகுதித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிகளை ஈட்ட முடியாது. நுட்பமாக சிந்திக்கின்ற, அதனை வெளிப்படுத்துகின்ற திறன் மாணவர்களுக்குத் தேவை என்றார்.
தமிழகம் மற்றும் புதுவையின் முன்னணிப் பல்கலைக் கழகங்களிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட  இதழியல் துறைப் பேராசிரியர்கள் மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்துகின்றனர். மாணவர்களுக்கான வளநூல்கள் வழங்கப்பட உள்ளன.  நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் பேராசிரியர் வை.நடராஜன் வரவேற்றார். முனைவர் இரா.சுப்பிரமணி நன்றி கூறினார். மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளை பேராசிரியர் சு.நந்தகுமார் ஒருங்கிணைத்துநடத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com