திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ: உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அதைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.


திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அதைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கெளதம சிகாமணிக்கு ஆதரவாக சேலம் உடையாப்பட்டி பகுதியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியது:
தமிழகத்துக்கு கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது ஒருமுறை கூட வராத மோடி,  தற்போது வாக்குகளுக்காக தமிழகத்துக்கு 4 முறை வந்துள்ளார்.  மக்களவைத் தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.  அதைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். தேர்தலில் ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார்.
இந்தியாவின் வில்லன் மோடிதான்.  விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் திமுக, தேர்தலில் வெற்றி பெற்றால் ரத்து செய்யப்படும்.
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும்,  தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது சீட்டுக்காகவும்,  ஓட்டுக்காகவும்தான் என்றார். 
வாழப்பாடியில்...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை வெளிநாட்டு பயணம் மட்டும்தான் என,  வாழப்பாடியில் தேர்தல் பிரசாரம் செய்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக வேட்பாளர் கௌதம சிகாமணிக்கு ஆதரவு கேட்டு  வாழப்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 
பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.  ஆனால் கொடுக்கவில்லை.  நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால்,  மருத்துவராக முடியாத வருத்தத்தில் சகோதரி அனிதா உயிரிழந்தார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் நீட் தேர்வு, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்.
கருணாநிதியின் பேரனாக, மு.க.ஸ்டாலினின் மகனாகக் கேட்கிறேன்.  நடைபெறும் தேர்தலில் திமுக  கூட்டணிக்கு வாக்களித்து, ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.  தி.மு.க., வேட்பாளர் கௌதம சிகாமணி உடனிருந்தார்.  ஏற்பாடுகளை வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆத்தூரில்....
 நரசிங்கபுரம், ஆத்தூர்,  தலைவாசல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக  வேட்பாளர் பொன்.கெளதம சிகாமணியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஆகையால் சிந்தித்து வாக்களியுங்கள்.
அமைச்சர்கள் எந்த வேலையும் செய்வது கிடையாது. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்திலே தான் இருக்கிறார்கள் என்றார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் க. பொன்முடி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி, மதிமுக மாவட்டச் செயலாளர் வ. கோபால் ராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சி.க. முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com