அய்யனாரப்பன் திருவிழா

எடப்பாடியை  அடுத்த வேம்பனேரியில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் திருவிழா நடைபெற்றது.

எடப்பாடியை  அடுத்த வேம்பனேரியில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் திருவிழா நடைபெற்றது.
வேம்பனேரி பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இதைத் தொடர்ந்து, அய்யனாரப்பன், செவ்வந்திஅம்மன், வீரகாரசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  பூஜைகள் நடைபெற்று வந்தன. 
விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி அழைத்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து வேம்பனேரி, முத்தையம்பட்டி, காட்டூர்,புதுப்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி,  ஊர்வலமாக வருகை தந்து தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com