தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் 2-ஆவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர், இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலத்தில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர், இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோயில் தெருவைச்  சேர்ந்தவர் மண்டை விஜய் (எ) விஜயகுமார் (26). இவர் கடந்த ஏப். 26-ஆம் தேதி கொண்டப்பநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த பூபாலன் என்பவரிடம் கத்தியைக் காட்டி அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள அரை பவுன் தங்கச் சங்கிலியையும், அரை பவுன் தங்க மோதிரத்தையும் பறித்துச் சென்றார். இது தொடர்பான புகாரில் கன்னங்குறிச்சி போலீஸார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், விஜயகுமார் தனது கூட்டாளிகள் பரசுராமன், வசந்த் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2018 டிச. 26-இல் கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லையில் பகல் நேரத்தில் வீட்டில் புகுந்து வீட்டில் இருந்த வயதான பெண்மணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஏழரை பவுன் தங்கச் சங்கிலியையும், 3 பவுன் தங்க வளையல்களையும் பறித்துச் சென்றுள்ளார். அதேபோல, கடந்த 2018 டிச. 29-இல் சேலம் ஏற்காடு பிரதான சாலையில் சின்னகொல்லப்பட்டி சட்டக் கல்லூரி பேருந்து நிலையம் அருகில் இருந்த பழனியப்பனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி மற்றும் ரூ.ஆயிரம் பறித்துச் சென்றுள்ளார்.
இந்த வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்ற விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்து கடந்த ஏப்ரலில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், கடந்தாண்டு மே மாதத்தில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மகளிர் அழகு நிலையத்துக்கு சென்று அத்துமீறி, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி ,செல்லிடப்பேசி பறித்துச் சென்றதாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், விஜயகுமாரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர் தடுப்புக் காவல் சட்டம் தொடர்பான ஆணை மத்திய சிறையில் உள்ள விஜயகுமாருக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com