களஞ்சியம் நிர்வாகிகள் ஆலோசனை
By DIN | Published On : 18th May 2019 09:25 AM | Last Updated : 18th May 2019 09:25 AM | அ+அ அ- |

தலைவாசலில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பான தலைவாசல் வடக்கு வட்டாரக் களஞ்சியத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவாசல் வடக்கு வட்டாரக் களஞ்சியம் தனித்து செயல்படுவது, தேசிய அளவிலான கூட்டமைப்பில் இணைவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட்டாரத் தலைவி லட்சுமி, வட்டாரச் செயலர் ராணி, சுமார் 420 களஞ்சியங்களின் பொறுப்பாளர்கள், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.