மழை பெய்ய கலச விளக்கு பூஜை
By DIN | Published On : 18th May 2019 09:25 AM | Last Updated : 18th May 2019 09:25 AM | அ+அ அ- |

மழை பெய்யவும், இயற்கை வளம் சிறக்க வேண்டியும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் சங்ககிரியில் கலச விளக்கு, வேள்வி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு சங்ககிரி மன்றத் தலைவர் எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் எம்.சந்தானதுரை முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.செல்வம் வரவேற்றார். ஓம்சக்தி கொடியை மன்றத் துணைத் தலைவர் பி.வேல்முருகன் ஏற்றி வைத்தார்.
கலச விளக்கு பூஜையை சேலம் ஆதிபாரசக்தி சக்தி பீடத் தலைவி சி.அருள்மொழியும், வேள்வி பூஜைகளை சேலம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தலைவர் எஸ்.சந்திரமோகனும் தொடக்கி வைத்தனர்.
சேலம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கப் பொருளாளர் வி.பாலாஜி, நிர்வாகிகள் சங்கரி வேல்முருகன், மாரியம்மாள், வசந்தா கோவிந்தராஜ், பெருமாயம்மாள் வரதராஜி, வேள்விக் குழு நிர்வாகி யசோதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.