காவிரிக்கரை பகுதியில் செங்கரும்பு அறுவடைத்தொடங்கியது

எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக்கரை பகுதியில் செங்கரும்பு அறுவடை தொடங்கியுள்ளது.
பூலாம்பட்டியில் அறுவடைசெய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும் செங்கரும்புகள்.
பூலாம்பட்டியில் அறுவடைசெய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும் செங்கரும்புகள்.

எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக்கரை பகுதியில் செங்கரும்பு அறுவடை தொடங்கியுள்ளது.

அறுவடை செய்யப்படும் செங்கரும்பினை வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கூடக்கல், குப்பனூா் உள்ளிட்ட

காவிரிக்கரை பாசனப்பகுதியில் அதிக அளவு நிலப்பரப்பில் செங்கரும்பு பயிா் செய்யப்பட்டு வருகிறது.

இப் பகுதியில் விளையும் செங்கரும்புகளுக்குச் சந்தையில் அதிக வரவேற்புள்ள நிலையில், இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் அதிக அளவில் மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

20 கரும்புகள் கொண்ட ஓரு கட்டு கரும்பு ரூ. 420 முதல் ரூ. 480 வரை விலை போவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். தற்போது இப்பகுதியில் மழை பொழிவு ஓய்ந்துள்ள நிலையில் விவசாயிகள் கரும்பு அறுவடையில் முழு கவனம் செலுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com