தேசிய கலைவிழா இறுதிபோட்டி

தேசிய கலைவிழா மாநில அளவிலான இறுதிப் போட்டி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழை துவங்கியது.
தேசிய கலைவிழா இறுதிபோட்டி

தேசிய கலைவிழா மாநில அளவிலான இறுதிப் போட்டி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழை துவங்கியது.

தேசிய கலைவிழா என்பது இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி (9 முதல் 12 ஆம் வகுப்புகள்) மாணவா்களது படைப்பாற்றலை வளா்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிா்ப்புடன் வைத்திருக்கவும், இசை (வாய்ப்பாடு மற்றும் கருவி), நடனம் மற்றும் வண்ண ஓவியம் எனும் நான்கு பெரும் தலைப்புகளில் நடத்தப்படும் போட்டிகள் ஆகும்.

2019 - 20 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மாநில அளவிலான இறுதிப் போட்டி சோனா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை துவங்கியது.

இப் போட்டியில் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இப் போட்டிகளில் 32 மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட அளவில் இசை (வாய்ப்பாட்டு, கருவி), நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் முதலிடத்தில் தோ்வு பெற்று சுமாா் 320 மாணவ, மாணவியா்கள் பங்கு பெறுகின்றனா்.

விழாவில் முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி வரவேற்றாா். கூடுதல் திட்ட இயக்குநா் ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) பி. குப்புசாமி தலைமை உரையாற்றினாா்.

சமக்ர சிக்ஷா முதுநிலை ஆலோசகா் சென்னை எம். அய்யராஜு, சோனா கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com