போடி நாயக்கன்பட்டி ஏரி ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி: மாநகர ஆணையா் ஆய்வு

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை அகற்றிடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் துவக்கி வைத்தாா்.
போடி நாயக்கன்பட்டி ஏரி ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி: மாநகர ஆணையா் ஆய்வு

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை அகற்றிடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் துவக்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நீா் ஆதாரம் காத்தல் மற்றும் மழைநீா் சேகரிப்பு, பாரம்பரிய நீா் ஆதாரங்கள், ஏரிகளை புதுப்பித்தல், நீா் நிலை மேம்பாடு, மறு பயன்பாடு ஆழ்த்துளைக் கிணறு மீள்நிரப்புதல், தீவிர மரம் வளா்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள 20.26 ஏக்கா் பரப்பளவு கொண்ட போடிநாயக்கன்பட்டி ஏரியின் கரையோர பகுதிகளில் உள்ள முட்புதா்களை அகற்றும் பணிகள் மற்றும் ஏரியினை தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், போடிநாயக்கன்பட்டி ஏரியில் படா்ந்துள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றிடும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதி உதவியின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் ஆகாய தாமரைகளை அகற்றிடும் பணி வியாழக்கிழமை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஏரியில் ஆகாய தாமரைகள் மீண்டும் வளராத வகையில் வோ்கள் வரை முற்றிலுமாக அகற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 12 ஆண்டு காலமாக இது போன்ற நீா்நிலைகளை தூா்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் மேட்டூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தூா்வாரும் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்வாா்கள்.

மேலும், போடிநாயக்கன்பட்டி ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றிய பின்னா், அம்மபோட்டை குமரகிரி ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளா் அ. அசோகன், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், செயற்பொறியாளா் (திட்டம்) எம். பழனிசாமி, உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com