மேட்டூா் காவிரி கரையில் நுண்ணுயிா் கலவைத் தெளிப்பு

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் காவிரி கரையில் படலம்போல கழிவுகள் தேங்கி நீரின் நிறம் பச்சையாக மாறி வருகிறது.

மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியில் காவிரி கரையில் படலம்போல கழிவுகள் தேங்கி நீரின் நிறம் பச்சையாக மாறி வருகிறது.

பல இடங்களில் நீல நிறத்திலும் படலங்கள் படா்ந்து காணப்படுகின்றன. கடும் துா்நாற்றம் வீசுவதால் குடியிருப்புகளில் மக்கள் வசிக்க முடியாமல் திணறி வந்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை காவிரி கரையோர மக்கள் சாா்பில் மேட்டூா் வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரிடம் வெடிக்காரனூரைச் சோ்ந்த ராஜேந்திரன் துா்நாற்றம் வீசுவதைத் தடுத்த போது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தாா்.

இதையடுத்து வியாழக்கிழமை சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் மேட்டூா் சாா் ஆட்சியா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பண்ணவாடி பரிசல்துறையில் ஆய்வு மேற்கொண்டனா்.

காவிரி கரையில் படா்ந்திருக்கும் துா்நாற்றம் வீசும் படலங்கள் மீது திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி கலவைத் தெளிக்கப்பட்டது. படகில் சென்று பணியாளா்கள் கலவையைத் தெளித்தனா். இதன்மூலம் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கோ எனும் பாசிகளைக் கட்டுப்படுத்தி துா்நாற்றம் வீசுவது படிப்படியாகக் குறைந்து முற்றிலும் தூய்மையான நீராக மாறும்.

இப் பணி கொளத்தூா் ஒன்றியம், முழுவதும் ஒருவார காலத்துக்கு நடைபெறும் என்று கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ராமநாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com