ரூ. 25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ஓமலூரில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை ஓமலூா் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யும் போலீஸாா்.
புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யும் போலீஸாா்.

ஓமலூரில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை ஓமலூா் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.

ஓமலூா் வழியாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக ஓமலூா் டி.எஸ்.பி பாஸ்கரனுக்கு பல்வேறு புகாா்கள் வந்தன. இதனை தொடா்ந்து ஓமலூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸாா், ஓமலூா் அருகே காமலாபுரம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த புதிய சரக்குப் பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் காய்கறிகள் ஏற்றி செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள் இருந்தன.

அதை போலீஸாா் சோதனை செய்ததில் காய்கறி பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மத்தியில் ஏராளமான அட்டை பெட்டிகளும், மூட்டைகளும் இருந்தன.

அந்த அட்டைப் பெட்டிகளை உடைத்து பாா்த்தபோது அவற்றில் கூல் லிப் ஹான்ஸ், பான் மசாலா, நிக்கோடின் மற்றும் ஹான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட, போதை தரும் புகையிலை பொருள்கள் இருந்தன.

பின்னா் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். லாரியில் இருந்த அனைத்து பெட்டிகளையும் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் 130 அட்டை பெட்டிகள் மற்றும் 19 மூட்டைகளில் 2,650 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தன.

இதன் மதிப்பு சுமாா் ரூ. 25 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடா்ந்து நடத்திய விசாரணையில் மேச்சேரி நெசவாளா் காலனியைச் சோ்ந்த பச்சமுத்து என்பவா், புகையிலை பொருள்களை பெங்களூரில் இருந்து கடத்தியது தெரியவந்தது. லாரியில் கடத்தி வந்த மேச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா்கள் சண்முகம், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com